• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பாஜகவினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

  • Share on

தூத்துக்குடியில் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடியில் ஜெயராஜ் ரோடு சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ முச்சந்தி இசக்கியம்மன் கோவில் மற்றும் ஸ்ரீ சுடலை ஆண்டவர் கோவில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும் அதனை சாலை விரிவாக்க பணிகளுக்காக மாநாகராட்சி நிர்வாகம் இடிக்க உள்ளதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து பாஜகவினர் அங்கு சென்று கோவிலை இடிக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் பேசி தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையடுத்து பாஜக மாவட்ட தலைவர்  பால்ராஜ் தலைமையில் பாஜகவினர்  மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் பாஜக நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். அதில், தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முச்சந்தி இசக்கியம்மன் திருக்கோவில் தொடர்ந்து 150 ஆண்டுகளாக பொது மக்களால் பொதுக்கோவிலாக வழிபாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்சமயம் தூத்துக்குடி நகர் முழுவதும் நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியை காரணம் காட்டி மேற்படி கோவிலை முழுவதுமாக அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. 

இது இக்கோவிலை வழிபட்டு வரும் பக்தர்களின் மணம் புண்படும் படியாகவும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. மேலும், சாலை விரிவாக்க பணிக்கு எந்த விதத்திலும் கோவில் இடையூறாக இல்லை. எனவே, தாங்கள் சம்பந்தப்பட்ட கோவில் இருக்கும் பகுதிக்கு வந்து நில அளவை செய்து ஆய்வு செய்யும் பட்சத்தில் மேற்படி கோவிலால் சாலைப்பணிக்கு எந்தவித இடையூறும் இல்லை என்பது தெரியவரும். எனவே, கோவிலை எந்தவித சேதாரமும் செய்யாமல் தொடர்ந்து பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் கோவிலை வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த முற்றுகைப் போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கனக ராஜ், தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் முரளி ரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, ஓபிசி மாநில செயலாளர் விவேகம் ரமேஷ், மாவட்ட பொதுச்செயலாளர் விஎஸ்ஆர்.பிரபு , தொழில் மற்றும் பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் சுவைதர், வடக்கு மண்டல தலைவர் கனகராஜ், மேற்கு மண்டல பொறுப்பாளர் பாலமுருகன், பாஜக மாவட்ட செயலாளர் மற்றும் கோவில் தர்மகர்த்தா மற்றும்  மான்சிங், ரவிசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

ஸ்மாட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டு அறிவிப்பு பலகை வையுங்கள் - பாஜக!

  • Share on