• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கொரோனா 3வது அலை பரவல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பாக கொரோனா பெருந்தொற்று 3வது அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு வாரத்தின் 4ம் நாள் நிகழ்ச்சி இன்று தூத்துக்குடி FCI குடோன் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தலைமையில் நடைபெற்றது.

கொரோனா 3ம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று (04.08.2021) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பாக தூத்துக்குடி FCI குடோன் முன்பு கொரோனா நோய் பரவல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  தலைமையில் நடைபெற்றது.  அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு சானிடைசர் மற்றும் முககவசங்கள் வழங்கினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் பேசுகையில் :


தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 3ம் அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த 4 நாட்களாக அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பரவி வரும் 3ம் அலை கொரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வருமுன் காப்போம் என்ற நோக்கத்தில் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு காவல்துறை சார்பாக ஏற்படுத்தி வருகிறோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இருந்தாலே கொரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றி கொள்ளமுடியும்.

மேலும் பொதுமக்கள் முக்கவசம் அணியும் போது வாயையும் மூக்கையும் நன்றாக மூடியவாறு முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று விழிப்புணர்வு வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர்  ஆனந்தராஜன், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர், மயிலேறும் பெருமாள் மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் செய்திருந்தனர்

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்துப்பிரிவு அதிகாரி  விநாயகம், தென்பாகம் உதவி ஆய்வாளர் சிவக்குமார், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் சுனைமுருகன், தென்பாகம் உதவி ஆய்வாளர்  நாகராஜன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜ், தலைமைக் காவலர் சுப்பிரமணியன்  உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் புதிய நகர பேருந்து சேவை : அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்பி துவக்கி வைத்தனர்!

மண்புழு உரத் தயாரிப்பு தொழில்நுட்பம் - வேளாண்மை துறை யோசனை!

  • Share on