மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராக தூத்துக்குடியைச் சேர்ந்த விவேகம் ரமேஷ்சை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்துள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் சார்பில் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவுக்கு ஆளுநரின் பிரநிதிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நியமனம் செய்யப்படுவது வழக்கம்.
இந்நடைமுறையின் அடிப்படையில் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக தூத்துக்குடியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணியின் மாநில செயலாளரும், விவேகம் டிரவால்ஸ் உரிமையாளருமான ரமேஷ் ஆளுநரின் பிரதிநிதியாக செனட் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் மேல்சபை (செனட்) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள விவேகம் ரமேஷ்க்கு, தூத்துக்குடி பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், பாஜக தகவல் தொடர்பு பிரிவு மாநில செயலாளர் முரளிரத்தினம், தகவல் தொடர்பு பிரிவு நிர்வாகிகளான மாவட்ட செயலாளர் கணேஷ், வடக்கு மண்டல தலைவர் காளிராஜா, கிழக்கு மண்டல தலைவர் ஜெயகுமார், ஆத்தூர் ஒன்றிய தலைவர் மூர்த்தி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.