• vilasalnews@gmail.com

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு கடன் உதவி : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கைவினைக் கலைஞர்களுக்கு டாம்கோ மூலம் கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான் மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் ஏற்கனவே தனிநபர் கடன், சுய உதவிக்குழுக் கடன் மற்றும் கல்விக்கடன் ஆகியவை குறைந்த வட்டி வீதத்தில் சிறுபான்மை யினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகம் ‘VIRASAT’’என்ற கைவினை கலைஞர்க ளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கடன் திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.

இந்நிலையில் தேசிய சிறுபான்மை யினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் முகவராக செயல்படும் டாம்கோ மூலம் கைவினை கலைஞர்க ளுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளின்படி குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்கப் படுகிறது. மேற்படி கடன் தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக் கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98,000/-மும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்க ளுக்குரூ.1,20,000/-மும் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் பெண்களு க்கு 4% வட்டி வீதத்திலும் ஆண்களுக்கு 5% வட்டிவீதத்திலும் அதிகபட்சம் ரூ.10 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். அவ்விண்ணப்பதாரர் கோரும் கடன் தொகையில் 90% தேசிய சிறுபான்மை யினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகம் (NMDFC), 5% தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO), மீதமுள்ள 5% விண்ணப்ப தாரரின் தொகையும் அடங்கும். கடன் திரும்ப செலுத்தும் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெறவிரும்பு வோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப் பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : அதிமுக ஆலோசனை!

தூத்துக்குடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் : மத்திய தொல்லியல் இயக்குனர் தகவல்!

  • Share on