• vilasalnews@gmail.com

ஊனத்தை இழிவாகபேசி பணி செய்ய விடாமல் தடுப்பு : ஆட்சியர் அலுவலகத்தில் டாஸ்மாக் ஊழியர் தீக்குளிக்க முயற்சி!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், டாஸ்மாக் ஊழியர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே சிவஞான புரத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் பி.நாகராஜன் என்பவர் விற்பனையாளராக வேலைபார்த்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 5.10.2020ல் பணியில் சேர்ந்தார். இந்நிலையில், கடையின் மேற்பார்வையாளர் சரவணன் என்பவர் அவரது ஊனத்தை இழிவாகபேசி பணி செய்ய விடாமல் தடுத்து வந்தாராம். இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர், உதவி மேலாளருக்கு பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

டாஸ்மாக் ஊழியர் தீ குளிக்க முயற்ச்சி

இதனால் மனவேதனையடந்த நாகராஜன் இன்று ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது அவர் திடீரென தான்கொண்டு வந்த  மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றிவிட்டு தீக்குளிக்க முயன்றார்.

இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி பொன்னரசு, சிப்காட் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

  • Share on

மத போதகர் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்து மக்கள் கட்சி கோரிக்கை!

தூத்துக்குடியில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : அதிமுக ஆலோசனை!

  • Share on