மத போதகர் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் தா.வசந்தகுமார் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :
குமரி மாவட்ட மதபோதகர் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். ஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழ்வார்க்கும் நிகழ்விற்கு இலவசமாக தானியங்கள் வழங்கிட வேண்டும். இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்க வேண்டும். தனியார் மருத்துவமணைகளில் இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும், மின் கட்டணம் உயர்வை திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.