• vilasalnews@gmail.com

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத் திருவிழா - மக்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம்!

  • Share on

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத் திருவிழாவை முன்னிட்டு மக்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம் நடைபெற்றது.

உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத் திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 10 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழா நாள்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவ மாணவிகள் கல்விமேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள் நடைபெறும். திருவிழாவின் 10-ம் நாள் விழாவில் நகர வீதிகளில் பனிமய அன்னையின் திருவுருவ தேர்ப்பவனி நடைபெறும்.

உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மாதாவை தரிசிக்க தூத்துக்குடிக்கு வருவார்கள். கடந்த  ஆண்டைப் போல் , இந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டாம் எனவும், வீடுகளில் இருந்தே பிராத்தனை செய்யும்படியும் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அறிவித்திருந்தார். அதன்படி,  மக்கள் பங்கேற்பின்றி தொடங்கியது 439 ஆம் ஆண்டு கொடியேற்ற நிகழ்ச்சி. இன்று காலை திருப்பலி, கூட்டுத்திருப்பலிக்குப் பிறகு ஆலயத்தின் முன்உள்ள கொடிக் கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. இத்திருவிழா, இன்று துவங்கி வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. 


``தூத்துக்குடியின் அடையாளங்களில் ஒன்றுதான் இந்த பனிமய அன்னை ஆலயம். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் வந்துவிட்டாலே மாதாக்கோயில் திருவிழாதான் நினைவுக்கு வரும். வெளியூர்களில் வசிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் திருவிழாவிற்காக குடும்பத்துடன் வந்துவிடுவார்கள். இந்த 10 நாளும் ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். வேண்டிய வரம் தருவதால் ஆண்டுக்கு ஆண்டு மாதாவை தரிசனம் செய்ய குவியும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும். சாலையின் இருபுறமும் வழிநெடுகிலும் பலகாரக்கடைகள். பேன்சி கடைகள், விளையாட்டுச் சாமான்கடைகள் கடைகளாகத்தான் இருக்கும். பொழுதுபோக்கிறாக பொருள்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி 10-ம் நாள் நடக்கும். அதையொட்டி உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டும். கொடியேற்ற நாளில் மக்கள் ஒவ்வொருவரும் வாழைப் பழங்களையும், குடங்களில் பாலையும் எடுத்துவந்து கொடிமரத்தின் முன்பு வைத்து ஜெபிப்பர். பின்னர், கொடியேற்ற நிகழ்ச்சி முடிந்தபிறகு வந்திருப்பவர்களுக்கு ஒரு டம்ளர் பாலும், ஒரு பழத்தையும் கொடுப்பார்கள். மாதாவே அதை வழங்குவதாக நினைப்பார்கள். ஆனால், தற்போது மக்கள் இல்லாமல் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்திருக்கு. 

மேலும், பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து அன்னையை தரிசிக்க அனுமதி வழங்கப்படும்.

திருவிழாக் கடைகள், பொருட்காட்சிகள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. அன்னை தேர்பவனியும் இந்த ஆண்டு நடைபெறாது. 

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளி மாணவி மின்சாரம் தாக்கி பலி!

தூத்துக்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வாகன விபத்து : டிரைவர் பலி!

  • Share on