ஓட்டப்பிடாரம் அருகே டி.வி. போட முயன்றபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை வடக்கு கைலாசபுரம் கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி (47). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சண்முகத்தாய் இவர்களுக்கு மகாபிரபு என்ற மகனும், மதுபாலா (வயது 16) என்ற மகளும் உள்ளனர். மதுபாலா பசுவந்தனை அரசு மேல்நிலையப்பள்ளியில் 10வகுப்பு படித்து வந்தார்.
மதுபாலா இன்று மதியம் வீட்டில் இருந்த டி.வி.யை போடுவதற்கு சுவிட்சை போட முயன்றுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கி மதுபாலா பரிதாபமாக உயிர் இழந்தார். இதை அறிந்த பெற்றோர் பசுவந்தனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பசுவந்தனை போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் (பொறுப்பு) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.