ஓட்டப்பிடாரம் அருகே பைக்கை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புங்கவர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சௌந்தர பாண்டியன் மகன் முருகன் (61). இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குறுக்குச்சாலை மெயின் பஜாரில் நிறுத்தியிருந்த அவரது பைக் திருடுபோனது. இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் முருகன் புகார் செய்தார்.
அதன்பேரில் உதவி ஆய்வாளர் எபனேசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பைக் திருடிய காட்டு நாயக்கன் பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் முருகன் (27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மோட்டார் பைக்கை பறிமுதல் செய்தனர்.