• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு : மாவட்ட ஆட்சியர் தகவல்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம் உட்பட  அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  

மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள் துறையின் மூலம் தூத்துக்குடி நலப்பணிகள் இணை இயக்குநர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை, விளாத்திகுளம் அரசு மருத்துவமனை, காயல்பட்டிணம் அரசு மருத்துவமனை, திருச்செந்தூர் அரசு மருத்துவமனை, திருவைகுண்டம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் மருந்தாளுநர் (9 பணியிடம்), ஆய்வக நுட்புநர் தரம்-II(9 பணியிடம்) மற்றும் நுண்கதிர் வீச்சாளர் (9 பணியிடம்) பணியிடங்கள் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக தொகுப்பூதியத்தில் 6 மாதகால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடங்களுக்கு மாத ஊதியம் ரூ.12,000/- வழங்கப்படும். இப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலத்திற்கு மட்டும் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள் வருங்காலங்களில் பணிவரன் முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது. 

பணியில் சேர விரும்புவோர் உரிய கல்விச் சான்றிதழ்களுடன் "இணை இயக்குநர் நலப்பணிகள், இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம், 166, வடக்கு கடற்கரை சாலை, மீன்துறைவளாகம், தூத்துக்குடி– 628 001" என்ற முகவரிக்கு 28.07.2021-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு!

  • Share on