• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு இன்று வருகை!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் ஆய்வு, திருச்செந்தூர் புதிய சந்தை துவக்க விழாவில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பங்கேற்கிறார்.

நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முதலாக அமைச்சர் கே.என்.நேரு இன்று (24.7.2021)  தூத்துக்குடி மாவட்டம் வருகிறார். அவர் தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடக்கும் பல்வேறு பணிகளை அமைச்சர் கே. என்.நேரு ஆய்வு செய்கிறார். அவருடன் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாநகராட்சி செயற்பொறியாளர் சேர்மக்கனி மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

பின்னர் திருச்செந்தூர் செல்லும் அமைச்சர் கே.என்.நேரு அங்கு புதிதாக சந்தை அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

  • Share on

மைனர் பெண் பாலியல் பலாத்காரம் - இளைஞர் கைது!

தூத்துக்குடியில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

  • Share on