• vilasalnews@gmail.com

மைனர் பெண் பாலியல் பலாத்காரம் - இளைஞர் கைது!

  • Share on

விளாத்திகுளம் பகுதியில் 17 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சி செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உட்கோட்டம் வி.தலவாய்புரம் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் காளிராஜ் (22) என்பவர் 17 வயது சிறுமிக்கு திருமண ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் தற்போது சிறுமிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பெண்குழந்தை பிறந்துள்ளது. பின்னர் காளிராஜ் அந்த சிறுமியின் ஜாதியை காரணம் காட்டி அவதூராகவும் பேசியுள்ளான். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ்  வழக்குப்பதிவு செய்து காளிராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

  • Share on

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் : வங்கி முன்பு வாலிபர்கள் தர்ணா போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு இன்று வருகை!

  • Share on