• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ஸ்டேன் சாமிக்கு அஸ்தி அஞ்சலி கூட்டம்!

  • Share on

அண்மையில் மறைந்த சமூக போராளி ஸ்டேன் சாமிக்கு  அனைத்து ஜனநாயக கட்சிகள், அமைப்புகள் சார்பாக தூத்துக்குடியில் அஸ்தி அஞ்சலி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மற்றும் ஏழை மக்களின் நலன்களுக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி.

திருச்சியைச் சேர்ந்த ஸ்டேன் சுவாமி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தங்கியிருந்து ஆதிவாசி மற்றும் பட்டியலின மக்களின் உரிமைகளுக் காகப் போராடி வந்தார்.

கடந்தாண்டு தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரால் கைது செய்யப்பட்ட பழங்குடியின செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி, அன்மையில் மும்பையில் உடல் நலக்குறைவினால் காலமானார். அவருக்கு வயது 84. இவரது மறைவிற்கு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மனித உரிமை மீட்புக்குழு மூலம், அனைத்து ஜனநாயக கட்சிகள், அமைப்புகள் சார்பில் தூத்துக்குடி மாதாகோவில் அருகே ஸ்னோ ஹால் கூட்ட அரங்கில் அஸ்தி வைக்கப்பட்டு நினைவஞ்சலி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இதில், பல்வேறு  கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் : வங்கி முன்பு வாலிபர்கள் தர்ணா போராட்டம்!

  • Share on