• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடியில் இருசக்கர விற்பனை நிலையத்தில் வேலைபார்த்து வந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.  

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி ஆவுடையார் புரத்தைச் சேர்ந்தவர் குருசாமி மகன் கணேசன் (41), இவர் தூத்துக்குடி- எட்டயபுரம் ரோட்டில் உள்ள இருசக்கர விற்பனை நிலையத்தில் வேலைபார்த்து வந்தார். இன்று ( 23.7.2021 ) சுமார் மதியம் 1 மணியளவில் ஒரு வாகனத்திற்கு வாட்டர் சர்வீஸ் செய்தபோது எதிர்பாராதவிதமாக உடலில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். 

இதில் மயக்கம் அடைந்த கணேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறநதுவிட்டதாக தெரிவித்துள்ளர். இதுகுறித்து புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

  • Share on

பெண்களுக்கு செல்போனில் ஆபாசபடம் அனுப்பி பாலியல் தொல்லை : கொத்தனார் கைது!

தூத்துக்குடியில் ஸ்டேன் சாமிக்கு அஸ்தி அஞ்சலி கூட்டம்!

  • Share on