• vilasalnews@gmail.com

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநிலச் செயலாளருக்கு வாழ்த்து!

  • Share on

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவராக இருந்த முரளி ரத்தினம் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு, மாவட்ட தலைவர் பால்ராஜ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின்  மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யபட்டு வருகிறது . பல புதிய திட்டங்களும் அறிமுகப் படுத்தபட்டுள்ளது .

இதனை தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு அணியில் மாநில அளவில் பல மாற்றங்கள் செய்யபட்டுள்ளது. அதன்படி மாவட்ட அளவில் உள்ள நிர்வாகிகளுக்கு மாநில பொறுப்புகள் கொடுக்கபட்டுள்ளது.  சில நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளது .

அதன் அடிப்படையில், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவராக இருந்த முரளி ரத்தினம்,  தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவின் மாநிலச் செயலாளராக நியமிக்க பட்டுள்ளார் . அதற்கான  ஆணையை தகவல் தொழில் நுட்பம் சமூக ஊடக பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமார்  கடந்த புதன்கிழமை அன்று வெளியிட்டார்.

புதியதாக மாநிலச் செயலாளராக பொறுப்பு ஏற்ற முரளி ரத்தினத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் உட்பட பல்வேறு பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள்  வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

  • Share on

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது!

குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடும் பணி : ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்!

  • Share on