தூத்துக்குடி பனிமய மாதா கோவில் பின்புறம் நிறுத்திவிட்டு சென்ற இருசக்கர வாகனத்தை திருடியவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மேரி காலனி பகுதியை சேர்ந்தவர் ஜோக்கின் மச்சாடு மகன் பெல்சிட்ரா (45). இவர் 18.07.2021 அன்று தனது இரு சக்கர வாகனத்தை தூத்துக்குடி பனிமய மாதா கோவில் பின்புறம் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது.
இதுகுறித்து பெல்சிட்ரா அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி செல்சினி காலனியை சேர்ந்த மணிகண்டன் மகன் சுதாகர் (21) என்பவர் பெல்சிட்ராவின் இரு சக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து சுதாகர் என்பவரை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து திருடப்பட்ட இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.