தூத்துக்குடியில் தெற்கு மண்டல பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மண்டல பாஜக செயற்குழு கூட்டம் ஜே.எஸ்.நகரில் மண்டல தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்னதங்கம் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பால்ராஜ், பொதுச்செயலாளர் வி.எஸ்.ஆர்.பிரபு, அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பாலமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர்.
மேலும், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுசெயலாளர்களான தங்கபழம், லிங்கமாரிசெல்வம், துணைத் தலைவர்கள் செண்பகராஜ் ராஜேந்திரன், கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் அரவிந்த்குமார், விவசாய மண்டல் தலைவர் கணேசபெருமாள்,கிராம நிர்வாக வளர்ச்சி பிரிவு மண்டல தலைவர் தனவீரபாண்டியன், அரசு தொடர்பு பிரிவு மண்டல தலைவர் சங்கர நாராயணன், கிளைத்தலைவர்கள் சேகர், காளிமுத்து, மண்டல செயற்குழு உறுப்பினர் பெமிலா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், உப்பாற்று ஓடை கரையில் இருபது அடி அகலத்தில் தார்சாலை அமைக்க வேண்டுதல், பைபாஸ் நான்கு வழிசாலை மற்றும் நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முந்தைய அரசு நிலம் கையகப்படுத்தி அதில் அடிக்கல் நாட்டிய இடத்தில் விரைவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கவேண்டுதல், முத்தையாபுரம் பகுதியில் கழிவு நீர் கால்வாய்களை சீர்படுத்தி மழைக்காலத்தில் தொற்று நோய் பரவாமல் தடுத்தல், உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டு கொ ள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
மேலும், தெற்கு மண்டலத்தில் உள்ள ஒன்பது மாநகராட்சி வார்டுகளிலும் பாஜக தனித்து போட்டிட ஏகமனதாக முடிவு செய்யபட்டு, அதற்கு தீவிரமாக அனைத்து வீடுகளிலும் தினசரி தொடர்பு கொண்டு மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை விளக்கிட, தெருவாரியாக பத்து பேர்கள் வீதம் ஒன்பது வார்டுகளிலும் பாஜக கட்சி காரியகர்த்தாக்களை நியமனம் செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முடிவில் தங்கபழம் நன்றி கூறினார்.