• vilasalnews@gmail.com

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண் விற்பனை - இருவர் கைது!

  • Share on

தூத்துக்குடி பிரையண்ட் நகரில் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு எண்களை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தூத்துக்குடி பிரையண்ட் நகர் 8வது தெரு ஜங்ஷன் அருகே, அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம்(45), பிரையண்ட் நகர் 13வது தெருவைச் சேர்ந்த சின்னதுரை(35) ஆகியோர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு எண்ணை விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு எண்களை விற்பனை செய்த இருவரையும் உதவி ஆய்வாளர் சிவக்குமார் கைது செய்தார்.

  • Share on

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

தூத்துக்குடி தெற்கு மண்டல பாஜக செயற்குழு கூட்டம்!

  • Share on