கல்வி கண்திறந்த கர்மவீரர் காமராஜர் நற்பணி இயக்கம் சார்பாக 500 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது முள்ளக்காடு ராஜிவ் நகரில் வைத்து நடைபெற்றது.
பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 119- வது பிறந்தநாள் விழாவானது (15.07.2021) வியாழன் இன்று முள்ளக்காடு ராஜிவ் நகரில் வைத்து கர்மவீரர் காமராஜர் நற்பணி இயக்கம் சார்பாக 500 ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி, சேலை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது நற்பணி இயக்க தலைவர் டி.ஆர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலன் மற்றும் நாம் தமிழர் கட்சி மாவட்ட மகளிர் பாசறை அன்னலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு ஏழை எளிய மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், 59 வார்டு முன்னாள் கவுன்சிலர் சுடலைமணி, வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஆனந்த், உப்பு உற்பத்தியாளர் பச்சிராஜன் மற்றும் கல்வி கண்திறந்த கர்மவீரர் காமராஜர் நற்பணி இயக்க செயலாளர் சேர்மத்துரை, பொருளாளர் கணேசன், நிர்வாகிகள் ஸ்ரீராம் செல்வசேகர், கார்த்திக் ராஜா, பாஜக கிழக்கு மண்டல பொது செயலாளர் முனிவேல் உள்ளிட்ட நற்பணி இயக்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.