• vilasalnews@gmail.com

கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (14.07.2021)  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், கலந்துகொண்டு தன்னார்வலராக பணியாற்றிய தோள் கொடு தோழா உள்ளிட்ட  12 தொண்டு நிறுவனங்க ளுக்கும், 36 மாணவர்களுக்கும், 30 தன்னார்வலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நேரத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துள்ளீர்கள். மாவட்ட நிர்வாகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலர்களும், காவல் துறையினரும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி னார்கள். அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அரசு அலுவலராக இருந்து பணியாற்றுவது வேறு, நீங்கள் அனைவரும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி தன்னார்வலராக அரசு மருத்துவமனைகளிலும், மாவட்ட கட்டுபாட்டு அறையிலும், மேலும் பல்வேறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க உதவிகளையும் செய்துள்ளீர்கள். உங்களது பணி மிகவும் பாராட்ட தக்கதாக இருந்தது.

மக்களை பாதுகாக்கின்ற இந்த பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டது மிகவும் பாராட்டக்குரியது. உங்கள் பணி சமுதாய பங்களிப்புடன் இருந்ததால்தான் நாம் கொரோனாவை விரைவாக கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. உங்களின் பங்களிப்பால்தான் கொரோனா கட்டுக்குள் வந்தது. 

நமது மாவட்டத்தில் கொரோனா குறைந்துள்ளது. கொரோனா இல்லையென நாம் இருந்துவிடக் கூடாது. கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து செய்து வர வேண்டும். மாவட்ட நிர்வாகத்துடன் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், மக்களும் ஒன்றுசேர்ந்து பாதுகாப்புடன், விழிப்புடன் இருந்தால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். அடுத்ததாக 3வது அலை வந்தாலும் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து மக்களை காக்கின்ற பணியை மேற்கொள்வோம். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உங்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி ஆட்சியர் பயிற்சி ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் நேரு, மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி செலின்ஜார்ஜ், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, பேரிடர் வட்டாட்சியர் சசிகுமார் மற்றும் அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் புறக்காவல் நிலையம் : மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்!

காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

  • Share on