தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு இளம் தொழிலதிபர் முள்ளக்காடு ராஜ்குமார் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பெருந்தலைவர் காமராஜரின் 119-வது பிறந்தநாள் விழா இன்று (15-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. காமராஜரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், சமுதாய தலைவர்கள், நாடார் சங்க நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் காமராஜர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
இந்நிலையில், தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு , காமராஜ் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள காமராஜரின் திருஉருவச் சிலைக்கு, அய்யானார் ஏஜென்சி மற்றும் டிரான்ஸ் போர்ட் உரிமையாளரும், இளம் தொழிலதிபருமான முள்ளக்காடு ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில், ஓபிசிஅணி காங்கிரஸ் மாநில பொதுசெயலாளர் தினகரன், அமுமுக முள்ளக்காடு ஊராட்சி செயலாளர் பாலா, ஜெயபால், சக்தி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.