தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஏர்போட் அட்வைசரி கமிட்டி கூட்டத்தில் தூத்துக்குடி விமானநிலையத்தில் சரக்கு விமானம் மற்றும் இரவு நேர விமான சேவை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஏர்போட் அட்வைசரி கூட்டம் ஏர்போட் அட்வைசரி கமிட்டி தலைவர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் இன்று (13.07.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கூடுதல் ஆட்சியர் சரவணன், ஏர்போட் டைரக்டர் சுப்பிரமணியம் மற்றும் ஏர்போட் அட்வைசரி உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசியதாவது:
இன்றைய கூட்டத்தில் இரவு விமான சேவைக்காக நடவடிக்கை மேற்கொள்தல், ரன்வே நீளம் அதிகரித்தல் தொடர்பான பணிகளை விரைவாக மேற்கொள்ளுதல், மேலும் சரக்கு விமானங்களை வர செய்வது, விமான சேவைகளை அதிகப்படுத் துவது, எதிர்கால தேவையை அடிப்படையாக வைத்து பல்வேறு வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தூத்துக்குடி விமான நிலையம் சிறந்த விமான நிலையமாக மாற்றிடும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விமான நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்த தேவையான உதவிகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து வழங்கும். விமான நிலைய பணிகளை எதிர்கால தேவைக்கு தகுந்தவாறு இப்போதே திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அபிசேக் டோமர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி ஆட்சியர் பயிற்சி ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், உறுப்பினர் எட்வின்சாமுவேல், ஏர்போட் டிஜிஎம் சுந்தரவேலு, திமுக பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, ஏர்போட் மேலாளர் ஜெயராம், ஏர்போட் ஜி.எம், சிவில் என்ஜினியர் ராதாகிருஷ்ணன், இன்டிகோ தூத்துக்குடி மேலாளர் பிரவின் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.