• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் புதிய பள்ளி கட்டிடம்: கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார்!

  • Share on

தூத்துக்குடி பள்ளியில் ரூ.17.40 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டும் பணிகளை கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி சிதம்பரநகர் வ.உ.சி கல்விக்கழக நடுநிலைப் பள்ளியில் எஸ்.இ.பி.சி பவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.17 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், வ.உ.சி. கல்விக்கழக நிர்வாகி ஏ.பி.சி.வி.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூறியதாவது:

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 

விரைவில் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும் என்று நம்புகிறோம். டெல்லி செல்லும் போது இதை நான் வலியுறுத்துவேன். முதலில் நிலம் வாங்கி கொடுத்த பிறகு தான் அவர்கள் மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகளை செய்ய முடியும். தற்போது நிலத்தை வாங்கி கொடுப்பதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும், அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும் என்றார். நிகழ்ச்சியில் எஸ்.இ.பி.சி பவர் பிரைவேட் லிமிடெட் துணைத்தலைவர் ஆர்.குமார், பொது மேலாளர் ரமேஷ், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தள்ளுபடி செய்யப்பட்ட நகைக்கடன்களுக்கான நகைகளை திருப்பி வழங்க தமிழ் விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமானம்; சரக்கு விமான சேவை!

  • Share on