• vilasalnews@gmail.com

தள்ளுபடி செய்யப்பட்ட நகைக்கடன்களுக்கான நகைகளை திருப்பி வழங்க தமிழ் விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

  • Share on

கடந்த அதிமுக ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய நகை கடன்களுக்கான நகைகளை உடனடியாக விவசாயிகளுக்கு திருப்பி வழங்க கோரி தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 

கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட விவசாயிகளின் பயிர்க்கடன், நகைக்கடன் ஆகியவற்றைத் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது. கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதிற்கான ரசீதும் வழங்கப்பட்டு ஆறு மாதம் ஆகிறது. ஆனால்,  இன்னும் விவசாயிகளுக்கு நகைகள் திருப்பித் தரப்படவில்லை.

விவசாயிகளுக்கு தற்போது விதைப்புக்கு பருவ காலம் ஆரம்பிக்கும் நேரம் வந்துவிட்டது. நிலங்களில் உழவு செய்து பக்குவப் படுத்தவும், விதைகள், உரம் போன்றவைகள் வாங்கவும் விவசாயிகள் கையில் பொருளாதாரம் இல்லாத சூழ்நிலையில், இந்த கொரோனா காலத்தில் எங்கும் கடன் பெற முடியாத சூழ்நிலை உள்ளது.

இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களில் உள்ள தள்ளுப்படி செய்யப்பட்ட நகைக்கடன்களுக்கான நகைகளை எல்லாம் விவசாயிகளுக்கு திருப்பி வழங்கினால், அந்த நகைகளை வைத்து விவசாயிகள் கடன் பெற்று விவசாயம் செய்ய முடியும். மழை காலம் நெருங்குவதால் கால தாமதம் செய்யாமல் கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் தள்ளுப்படி செய்யப்பட்ட நகைக்கடன்களுக்கான நகைகளை உடனே திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை!

தூத்துக்குடியில் புதிய பள்ளி கட்டிடம்: கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார்!

  • Share on