கயத்தார் அருகே அனுமதியின்றி கண்மாயில் மணல் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து டிராக்டர் மற்றும் 1 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அரிகண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று (10.07.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசன்குளம் கண்மாயில் ஆத்திகுளத்தைச் சேர்ந்த பால் மகன் இசக்கி பாண்டி (32), மானம்காத்தான் பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் கார்த்திக் (20) மற்றும் மணிகண்டன் மகன் ராஜா ஆகிய மூன்று பேர் சேர்ந்து அனுமதியின்றி டிராக்டர் மூலம் கண்மாயில் மணல் அள்ளியது தெரியவந்தது.
இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்ட மூன்று பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து டிராக்டர் மற்றும் 1 யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.