பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தூத்துக்குடி மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், அதனை தடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசைக் கண்டித்து, தூத்துக்குடி மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில், தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், நெல்லை மண்டல வழக்கறிஞர் அணி செயலாளர் ரமேஷ், நெல்லை மண்டல இளைஞரணி செயலாளர் பிரகாஷ், நெல்லை மண்டல ஆதிதிராவிட நல அணி செயலாளர் பாரத், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ரங்கநாதன், மத்திய மாவட்ட துணைச் செயலாளர் ஜவஹர், தெற்கு மாவட்ட செயலாளர் சேகர், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் அலெக்ஸ், வடக்கு மாவட்ட செயலாளர் கதிரவன்,
மத்திய நற்பணி இயக்க மாவட்டச் செயலாளர் அக்பர், தெற்கு நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், வடக்கு நற்பணி இயக்க மாவட்டச் செயலாளர் ரமேஷ், மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் மணிகண்டன், வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் கோஸ் முகமது, மத்திய மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜேஷ்கண்ணா, மத்திய மாவட்ட தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் ராஜா, மத்திய மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி மாவட்ட செயலாளர் சாமி கண்ணு, ஊடகம் செய்தி பிரிவு பொன் மகாராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.