• vilasalnews@gmail.com

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் மருத்துவ உபகரணங்கள் : தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சகோ.மோகன் சி. லாசரஸ் வழங்கல்!

  • Share on

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் நிறுவனர் சகோதரர் மோகன் சி. லாசரஸ் வழங்கினார்.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாலுமாவடி ஏசு விடுவிக்கின்றார் அமைப்பின் மூலம் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (09.07.2021) நடைபெற்றது.  இ.சி.ஜி கருவி 2, மெட்டனல் மானிட்டர் 1, எக்ஸ்ரே மிசின் 1, எலைட் வியு பேசன்ட் மானிட்டர் 2, ஸ்டெச்சர் 4, வீல் சேர் 5 மொத்த மதிப்பு ரூ.10 லட்சத்து 9 ஆயிரத்து 650 மதிப்புள்ள உபகரணங்களை ஏசு விடுவிக்கின்றார் அமைப்பின் நிறுவனர் மோகன் சி.லாசரஸ் மாவட்ட ஆட்சியரிடம்  வழங்கினார். 

பின்னர் மருத்துவ உபகரணங்களை பெற்று ஆட்சியர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் நேருவிடம் வழங்கினார். பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து தற்போது தொற்றின் அளவு 20. 30 என குறைந்துள்ளது. மக்களின் ஒத்துழைப்பு காரணமாகத்தான் தொற்றின் அளவை விரைவில் குறைக்க முடிந்தது. இன்னும் முழுமையாக நாம் கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்பதால் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் நியுட்டன் வகை வைரஸ் பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில்தான் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

2வது அலையின்போது மக்கள் பங்களிப்பு மட்டுமின்றி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மூலம் அதிக அளவிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. நாலுமாவடி ஏசு விடுவிக்கிறார் அமைப்பின் மூலம் மோகன் சி.லாசரஸ் அவர்களும் ரூ.16 லட்சம் மதிப்பில் பல்வேறு உபகரணங்களை வழங்கி உள்ளார்கள். இன்றைய தினம் ரூ.10 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை வழங்கி உள்ளார்கள். இதுபோன்று திருச்செந்தூர் அரசு பொது மருத்துவமனைக்கும் ரூ.5 லட்சம் மதிப்பிலான கருவிகளை வழங்கி உள்ளார்கள். 

இது மருத்துவ சிகிச்சைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். தூத்துக்குடியில் உள்ள மைக்ரோபயலஜி ஆர்டிபிசிஆர் லேப் மூலம் 5 லட்சத்து 40 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா அதிக பரவலின்போது தினசரி 4 ஆயிரம் டெஸ்ட்கள் வரை பரிசோதனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைகள் அனைத்தும் அரசு மருத்துவமனை மூலமே மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் தொடர்ந்து மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை கழுவ வேண்டும். 

பொது வெளியில் செல்லும்போது பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2.50 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் அனைவரும் போட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து தடுப்பூசி வரவர தொடர்ந்து போடப்பட்டு வருகிறது. முதல் தவணை ஊசி போட்டவர்களுக்கு 2வது தவணை ஊசி ஏற்கனவே போட்ட பகுதிக்கு சென்று போடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

சகோ.மோகன் சி.லாசரஸ் ஏற்கனவே தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து ரூ.1.5 கோடி கொரோனா  நிவாரண நிதி வழங்கியுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு 15 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ மருந்து பொருட்கள்  மற்றும் மருத்துவ உபகரணங்கள், திருச்செந்தூர் மருத்துவமனைக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரண பொருட்களும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் சகோ.மோகன் சி லாசரஸின் சமூக சேவையை வெகுவாக பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் இயேசு விடுவிக்கிறார் ஊழிய சமூக அமைப்பான குட் சமாரியன் கிளப் பொருளாளர் தாமஸ், செயலாளர் தாமஸ் ஜெயபால், தூத்துக்குடி தலைவர் பிரேம் சிங், புதுவாழ்வு சங்க தலைவர் மருத்துவர் அன்புராஜ்,  மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஹெயின்ஸ் மற்றும் ஊழியர்கள்  செய்திருந்தனர்.

  • Share on

பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் மீது அவதூறு - தூத்துக்குடி பாஜக புகார்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்!

  • Share on