இந்திய பிரதமர் மோடி மற்றும் பாஜக மாநில தலைவர்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் தேசிய சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
பாஜக தகவல் தொழில்நுட்ப மாநில தலைவர் நிர்மல்குமார் உத்தரவின் பேரில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் வழிகாட்டுதலின் படி, இந்திய பிரதமர் மோடி மற்றும் பாஜக மாநில தலைவர்களை பற்றி தொடர்ந்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவு செய்வோர் மீது தேசிய சைபர் குற்றப்பிரிவில் இணையதளம் வாயிலாக, தூத்துக்குடி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக புகார் கொடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், சைபர் கிரைம் பிரிவு காவல் துணைகண்காணிப்பாளரை இன்று நேரில் சந்தித்து இந்த புகார் தொடர்பான ஆவணங்களை பாஜக நிர்வாகிகள் நேரில் அளித்தனர்.
இதில், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் குமார் தலைமையில், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர்கள் வேல்முருகன், வாரியர், நாகராஜன், விஜய சுந்தர், ரத்னவேல் மாவட்ட துணை தலைவர் நல்லமலை பாண்டி, , வழக்கறிஞர் பிரிவு மண்டல தலைவர் மாரிராஜ குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் இரத்தினமுரளி, மாவட்ட செயலாளர்கள் ஜேம்ஸ், வீரமனோகர், கணேஷ், வடக்கு மண்டல தலைவர் காளிராஜ், கிழக்கு மண்டல தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.