பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட பாஜக அலுவலகத்தின் முன்பு கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
பாரதிய ஜனதாகட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளம், தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக நேற்றைய தினம் (07.07.2021) புதன் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை வரவேற்று கொண்டாடும் விதமாக இன்று ( 08.07.2021) தூத்துக்குடி மாவட்ட பாஜக அலுவலகம் முன்பு அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாநில ஓ.பி.சி அணி செயலாளர் ரமேஷ், மாவட்ட பொது செயலாளர் பிரபு, மாவட்ட துணை தலைவர் தங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கி முத்து, மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட செயலாளர் மான்சிங், செய்தி மற்றும் ஊடக பிரிவு தலைவர் பாலமுருகன், தொழில் மற்றும் பொருளாதாரப் பிரிவு மாவட்ட துணை தலைவர் சுவைதர் மற்றும் சந்தனகுமார், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.