பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், அதனை தடுக்கத் தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி சிதம்பர நகரில் தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.