• vilasalnews@gmail.com

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு!

  • Share on

விளாத்திகுளத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக செயல் அலுவலர் கண்ணன், தக்கார் சிவகலைப்பிரியா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது : 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் காலியாக உள்ள நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட உள்ள கீழ்காணும் பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதி உள்ள இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 08.08.2021- ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய தகுதிச் சான்றுகளுடன் செயல் அலுவலர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் விளாத்திகுளம் நகர் மற்றும் வட்டம், தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதர விவரங்களை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1 ) பதவியின் பெயர் : மேளம்

காலியிடம் எண்ணிக்கை : 1

தகுதிகள் :

  1. தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  2. அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசையில் பள்ளியில் பயின்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
  3. 18 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஊதிய விகிதம் : 2300 -7400 ( நிலை 1, தளம் 1)

2 ) பதவியின் பெயர் : காவல்

 காலியிடம் எண்ணிக்கை :  1

தகுதிகள் :

  1. தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  2. 18 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஊதிய விகிதம் : 2300 -7400 ( நிலை 1, தளம் 1)

  • Share on

ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரங்கள் அரசு அதிகாரிகளால் பறிக்கப்படுகிறது - ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு புகார்!

எப்போதும்வென்றான் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு!

  • Share on