தூத்துக்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆதித்தமிழர் கட்சினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று (7.7.2021) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு, தெற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்வேலன், வடக்கு மாவட்ட செயலாளர் செண்பகராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். செய்தி தொடர்பாளர் ஆற்றலரசு மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.