தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தில் நள்ளிரவில் கார் எரிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் அப்துல் வகாப். இவரது மகன் காஜா நஜிமுதீன் (வயது 38) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் காலையில் காரை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதுபோல் நேற்று நேற்று காரில் வெளியில் சென்று விட்டு இரவில் காரை செட்டில் நிறுத்தியுள்ளார். இன்று அதிகாலை சுமார் 2.30ம ணி அளவில் கண்ணாடி வெடிக்கும் சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் நபர்கள் வந்து பார்த்தபோது, கார் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து உடனே அருகிலிருந்த காரின் உரிமையாளருக்கு தகவல் சொல்லி, தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது.
இதில் காரின் முன்பக்கம் முழுவதும் எரிந்து சேதமானது. நள்ளிரவில் அந்த காருக்கு யாரோ தீவைத்து விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் எரிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.