தூத்துக்குடியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமமுக - மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே தமமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்ம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமமுக மாவட்ட செயலாளர் ஹசன் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜோசப் ஜொலாஸ்கோ முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஆசாத் கண்டன உரையாற்றினார். நிர்வாகிகள் சம்சுதீன், முத்து, பிரவீன், கிதிர், இர்ஷாத், சர்தார் இப்ராஹிம், ஜோதிர் நுர், முஹம்மது ரபிக், அஜ்மல்கான், தமிழ் தங்க வாப்பா, ஷேக் ஜான் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.