• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் நாளை (ஜூலை 7) கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு 01.04.2021 முதல் 06.07.2021 முடிய மொத்தம் 6,328 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக 07.07.2021 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் பொது மக்களுக்கு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சி தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி - தூத்துக்குடி. ஊரக பகுதிகள் சோரீஸ்புரம், முறப்பநாடு, பக்கப்பட்டி, சென்னல்பட்டி, திருவலுதிநாடார்விளை, சிவலூர், அரசு பொது மருத்துவமனை - திருச்செந்தூர், அரசு பொது மருத்துவமனை - காயல்பட்டிணம், மேல புதுக்குடி, பழனியப்பபுரம், கடாச்சபுரம், அரசு பொது மருத்துவமனை - கோவில்பட்டி, நகராட்சி அலுவலகம் - கோவில்பட்டி,ஸ்ரீராம் நகர் - நகர்நல மையம் - கோவில்பட்டி, எட்டையாபுரம் பேரூராட்சி, அங்கன்வாடி மையம் - ஓம் சரவணாபுரம், அங்கன்வாடி மையம் - எப்போதும் வென்றான், அங்கன்வாடி மையம் - இ. கழுகாசலபுரம், அங்கன்வாடி மையம் - ஆதனூர், 

ஊராட்சி ஒன்றிய பள்ளி - குருவிநத்தம், அங்கன்வாடி மையம் - இலந்தைபட்டி, அங்கன்வாடி மையம் - அத்திக்குளம், அங்கன்வாடி மையம் - மானங்காத்தான், காமராஜ் நர்சரி மற்றும் துவக்கப்பள்ளி - கழுகுமலை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் - சிதம்பரம்பட்டி, சமுதாய நலக்கூடம் - காதலம்பட்டி, சமுதாய நலக்கூடம் - துலுக்கன்குளம், சமுதாய நலக்கூடம் - கீழவிளாத்திக்குளம், கலைஞர் கிளினிக் - விளாத்திக்குளம், அங்கன்வாடி மையம் - வள்ளிநாயகிபுரம், அங்கன்வாடி மையம் - மு.குமாரபுரம், ஊராட்சி நூலகம் - எம். கோட்டூர், ஊராட்சி ஒன்றிய பள்ளி - அயன்ராஜாபட்டி, ஊராட்சி ஒன்றிய பள்ளி - எஸ். குமாரபுரம் ஆகிய இடங்களில் பொது மக்களுக்கு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  • Share on

தூத்துக்குடியில் மருந்து கடை உரிமையாளர், மனைவியை தாக்கி ரூ.2.75 லட்சம் நகை கொள்ளை : 4பேர் கைது!

தூத்துக்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

  • Share on