இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்கள் மத்தியில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்காக்கவும் கட்சி தலைவருக்காகவும் தொடர்ந்து மலிவான தரம் தாழ்ந்த கருத்துக்களை பதிவிடுவதாக சுட்டிக்காட்டபட்டுள்ளது.
இத்தகைய அநாகரிகமான பதிவுகள் பொது அமைதியை சீர்குலைப்பதற்க்காகவும், குற்றச்செயல்களில் ஈடுபட வித்திடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றசெயல் ஊக்கும்விக்கும் விதமாக அமைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது தொடர்பாக மே மாதம் முதல் தற்போது வரையில் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக 75 நபர்கள் மீது வழக்குகள் பதியபட்டுள்ளதுதாகவும்
இவ்வழக்குகளில் எல்லை மீறிய வகையில் அவதூறுகளை பதிவிட்ட 16 நபர்கள் மட்டுமே கைது செய்யபட்டதாகவும் காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.