கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 2 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேற்று (5.7.2021 ) வெளியிட்டுள்ள அறிக்கையில் :
அதிமுகவின் கொள்கை, குறிக்கோள் களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட காரணத்தினால், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ரூபம் கே. வேலவன் ( மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்), பொன்ராஜ் ( விளாத்திகுளம் பேரூராட்சி ஜெயலலிதா பேரவை செயலாளர் ) ஆகியோர் இன்று (5.7.2021 ) முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள், அதிமுக தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.