எட்டயபுரம் அதிமுக செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, எட்டயபுரம் பேரூராட்சி அதிமுக செயலாளராக இருந்த ஆழ்வார் உதயகுமார், நேற்று (5.7.2021 l அதிமுகவிலிருந்து விலகி, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
ஆழ்வார் உதயகுமார் பாரதியார் கூட்டுறவு நூற்பாலை தலைவராகவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிகழ்வின் போது, மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் பெரியசாமி, கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.