• vilasalnews@gmail.com

மங்கலக்குறிச்சி ஊராட்சி தலைவர், செயலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார் மனு!

  • Share on

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் மங்கலக்குறிச்சி ஊராட்சி தலைவர் மற்றும் செயலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சார்பில் ஞானம்மாள் என்பவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளர். 

இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா மங்கலக்குறிச்சி ஊராட்சியில் தற்போது செயலராக இருந்து வரும் ராம் கணேஷ் என்பவரது தந்தை சின்னத்துரை கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை மங்கலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். அப்பொழுது ஊராட்சி மன்ற நடவடிக்கை அனைத்தும் ராம் கணேஷ் தான் செய்து வந்துள்ளார்.

அதே போல், தற்போது ஊராட்சி செயலர்  ராம் கணேஷின் தாய் பேச்சியம்மாள் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். எனவே ஊராட்சியில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளையும் ராம் கணேஷ் என்பவரே செய்து வருகிறார்.

ஊராட்சியில் நடைபெறும் நூறு நாள் வேலை திட்டத்தில் பல நபர்களிடம் வேலை செய்யாமலே வேலை செய்ததாக கையெழுத்தை பெற்று பணத்தை கணக்கில் ஏற்றி சம்பந்தப்பட்ட நபர்களின் கணக்கில் இருந்து பணத்தை இவர்களே எடுத்து கொள்கிறார். மேலும் அவர்களின் இது போன்ற மோசடிக்கு ஒத்துழைக்காத எங்களுக்கு நூறு நாள் வேலை வழங்க மறுக்கின்றனர்.

எனவே, ஒரே ஊராட்சியில் தாய் தலைவராகவும், மகன் ஊராட்சி செயலராகவும்  இருப்பதால்தான் இந்த மாதிரி தவறுகள் நடைபெறுகிறது. எனவே ஊராட்சி செயலரை உடனடியாக இடம் மாற்றம் செய்யவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் மங்கலக்குறிச்சி ஊராட்சி தலைவர் மற்றும் செயலர் மீது நடவடிக்கைவும், எங்களுக்கு நூறு நாள் வேலை வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

  • Share on

காயல்பட்டினம் நகராட்சியில் "பொது சேவை மையம்" கட்டிடப் பணிகளை துவங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திமுகவில் இணைந்த அதிமுக செயலாளர்!

  • Share on