• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்!

  • Share on

தூத்துக்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை  கைவிட வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்தும், கொரோனா தொற்று பரவல் காரணமான டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கட்டுமான பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், மின்சாரம் போன்ற விலைவாசி உயர்வை கண்டித்தும் தேமுதிக சார்பில் இன்று ( 5ம் தேதி ) காலை 10 மணியளவில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அதன் படி, தூத்துக்குடி மாவட்ட தேமுதிக சார்பில், தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணி துணை செயலாளர் சுபபிரியா முன்னிலை வகித்தார். மாநில நெசவாளர் அணி செயலாளர் மாரியப்பன் மத்திய, மாநில அரசை எதிர்த்து கண்டன உரையாற்றினார். பின்னர் மாட்டு வண்டியில் சிமெண்ட், செங்கல், மணல் ஏற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில்,  மாவட்ட பெருளாளர் விஜயன், மாவட்ட துணை செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் தங்கசாமி  ஜெயக்குமார், மாரியப்பன் அதிசியராஜ், மணிகண்டன், ஆறுமுகபெருமாள், மாரிசெல்வம், தன்ராஜ் சண்முகம், மேகலிங்கம் மாவட்ட மகளிரணி செயலாளர் வெண்ணிலா, நகர செயலாளர்கள் சித்தர்ராஜ், கண்ணன்,  வீரமணி, பூச்சிகாடு சுரேஷ், வடக்கு மாவட்ட  சோலை ராஜ்,  மாலை ராஜ்,  வடக்கு மாவட்ட பொருளாளர் ராஜன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவம், செயற்குழு உறுப்பினர் தயாலிங்கம், கேப்டன் மன்ற செயலாளர் ரகுமான், மீனவரணி செயலாளர் முனியசாமி, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் அலெக்சாண்டர், வர்த்தக அணி செயலாளர் குமார், பொதுக்குழு உறுப்பினர் ராஜபொம்மு, பகுதி செயலாளர்கள் சண்முகம், நாரயண மூர்த்தி, அரச முத்து, வி.எஸ்.அரச முத்து, சுப்பு, ஆதிலிங்கம், இருளப்பன், ராஜாமுகமது, சம்சுதீன், பொன்ராஜ், பேச்சிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

வகுப்புவாரிய கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீட்டு நிறைவேற்றப்பட வேண்டும் - சீர் மரபினர் நலச்சங்கம் கோரிக்கை!

காயல்பட்டினம் நகராட்சியில் "பொது சேவை மையம்" கட்டிடப் பணிகளை துவங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

  • Share on