115 சமூகங்களை அழைத்து பேசிய பின்பே, வகுப்புவாரிய கண்கெடுப்பு அடிப்படையில் எம்.பி.சி., இடஒதுக்கீட்டில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என சீர் மரபினர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சீர்மரபினர் நல சங்கத்தின் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு:
முந்தைய அதிமுக அரசு அவசர அவசரமாக 10.5% இடஒதுக்கீடு சட்டத்தை ஆட்சி அதிகாரம் முடிந்தபின் மோசடியாக கொண்டு வந்தனர். அச்சட்டம் சட்டப்படியும் நீதிமன்ற தீர்ப்புப்படியும் தவறானது என்பதால் உயர் நீதிமன்றத்தில் 6011/2021 வழக்கு தொடுத்து நிலுவையில் உள்ளது.
அச்சட்டத்திற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதோடு இடைக்கால தடைகோரும் மனுவும் நிலுவையில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை இச்சட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பதுதான் சரியானது.
338B(9)ன்படி பிற்படுத்தப்பட்டோர் நலன்சார்ந்த எந்த கொள்கை முடிவையும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை கலந்து ஆலோசித்து தான் செயல்படுத்தமுடியும்.
ஆனால் சட்டம் 8/2021 தேசிய ஆணையத்தை அனுகாமலேயே போடப்பட்டதாலும் மேலும் 115 சாதிகளில் யாரையும் கலந்து ஆலோசிக்காமலும் தமிழக ஆணையத்தின் ஆலோசனைகளை பெறாமல் சட்டம் போட்டது அதிகாரமற்ற அரசின் செயல் ஆகும். எனவே 115 சமூகங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, எம்பிசி இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்ய அரசுக்கு பரிந்துரைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கி தர வேண்டும் எனவும் கூறினர்.