அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் கொரோனா நிவாரணத்தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாக தெற்கு மாவட்ட அமைப்பாளர் சரவணன் பூசாரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அனைத்துப் பூசாரிகளுக்கும் கொரோனா உதவித்தொகை வழங்க வேண்டும், கடந்த நான்கு மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பூசாரிகள் ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும், பூசாரிகள் நலவாரியத்தைச் செம்மைப்படுத்தி உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும், கோவில் அறங்காவலர் குழுவில் அர்ச்சகர், பட்டாச்சாரியார், கிராமக் கோவில் பூசாரிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும், அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம கோயில் பூசாரிகள் பேரவை சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.