தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கஞ்சா விற்பனை செய்த 19 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று (04.07.2021) தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் ரோந்து சென்றபோது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மீளவிட்டான் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் சந்தானராஜ் (24), தூத்துக்குடி டேவிஸ்புரத்தை சேர்ந்த பலவேசம் மகன் பாலசுப்பிரமணியன் (37), தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி பெரியசாமி நகரை சேர்ந்த முனியசாமி மகன் ஜெகன்குமார் (23), தாளமுத்துநகர் எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி கோமஸ்புரத்தை சேர்ந்த அம்மாமுத்து மகன் கணேஷ் (20), சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்த ராமலிங்கம் மகன் முருகன் (58), திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீரபாண்டியபட்டணம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் ராமகிருஷ்ணன் (21), ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காயல்பட்டிணம் பகுதியை சேர்ந்த குமார் மகன் ஜெயபால் (26) மற்றும் முகம்மது யூசுப் மகன் முகம்மது அலி ஜின்னா (62), ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நரசன்விளை பகுதியை சேர்ந்த அருண்குமார் மகன் பரதன் (24) மற்றும் முக்காணியை சேர்ந்த வர்கீஸ் மகன் அமலகிருஷ்ணன் (24), குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நல்லூரை சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் நவீன் (25), கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கோவில்பட்டி வி.ஒ.சி நகரை சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிமுத்து (24), கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கழுகுமலை களஞ்சியம் பகுதியை சேர்ந்த முருகன் மனைவி மாரியம்மாள் (55), மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தாப்பாத்தி பகுதியை சேர்ந்த அந்தோணி மகன் மகேந்திரன் (47), மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மெஞ்ஞானபுரம் சத்தியா நகரை சேர்ந்த கணேசன் மகன் முருகன் (38), நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நாசரேத்தை சேர்ந்த ஜெயபால் மகன் நவீன் ரிச்சர்ட் (23), நாசரேத்தை சேர்ந்த ஜெயபாஸ்கர் மகன் விஜயபாலன் மற்றும் வைத்தியலிங்கம்புரத்தை சேர்ந்த அய்ப்பன் மகன் மாரிமுத்து (25), தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காந்திபுரி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் முத்துசேகர் (23) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் மேற்படி 19 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.