தூத்துக்குடியில் பாஜக ஐடி விங் மற்றும் சமூக ஊடகபிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
பாஜக தெற்கு மாவட்ட, தூத்துக்குடி சட்டமன்றதொகுதி உட்பட்ட தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் கூட்டம் இன்று பாஜக கட்சி அலுவலகத்தில் வைத்து நடை பெற்றது.
கூட்டத்தில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ளுதல், கட்சி வளர்ச்சி பணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது . அதனைத்தொடர்ந்து தகவல் தொழில்நுட்பம் பிரிவு புதிய மாவட்ட செயலாளராக அமர்நாத் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
இக்கூட்டத்தில், பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் பிரபு, தகவல் தொழில் நுட்ப மாவட்ட தலைவர் முரளிரத்தினம், மாவட்ட செயலாளர்கள் மனோகர், கணேஷ், வடக்கு மண்டலத் தலைவர் காளிராஜா, துணை தலைவர்கள் சங்கர், கணேஷ், கலைசெல்வன் செயலாளர்கள் கருப்பையா, கார்த்திக், சுரேஷ்,
கிழக்கு மண்டல தலைவர் ஜெயக்குமார், துணை தலைவர்கள் வினோத், கணேஷ், செயலாளர் முத்து லெட்சுமணன், மேற்கு மண்டல துணை தலைவர் சரத்குமார், செயலாளர்கள் சிவராமன், இசக்கி பாண்டியன், முத்துக்குமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.