தூத்துக்குடி பாஜக மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், கிழக்கு மண்டல பாஜக நிர்வாகிகள் கூட்டம் நேற்று (3.7.2021) மாலை நடைபெற்றது. இதில், அடுத்து நடைபெற உள்ள நிகழ்ச்சிகள், வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றுவது உள்ளிட்ட பல்வேறு கட்சி பணிகள் குறித்து ஆலோசனைகள் நடத்தபட்டது .
இதில், கிழக்கு மண்டல தலைவர் சந்தனகுமார், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், தொழில் மற்றும் பொருளாதார பிரிவு மாவட்ட துணை தலைவர் சுவைதர், கிழக்கு மண்டல துணை தலைவர் அசோக்குமார், ஜெயராமன், செந்தில், கணேஷ், பொதுச் செயலாளர் ராஜேஷ்கனி, சவுந்தரராஜன், மண்டல செயலாளர் பானுபிரியா, பாக்கிய லெட்சுமி, வெங்கடேஷ், மண்டல பொருளார் வன்னியராஜ், வணிகபிரிவு மாவட்ட செயலாளர் பால பொய்சொல்லான் , தகவல் தொழில் நுட்பம் தலைவர் ஜெயகுமார், அமைப்பு சார பிரிவு சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.