திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் யாத்திரை நிவாஸ் கட்டிட பணிகள் தொடர்பாகவும், கிரி பிரகார பகுதியில் கல் மண்டபம் அமைத்தல் தொடர்பாகவும் கனிமொழி எம்.பி., மற்றும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும், கல்வி நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு தொடர்பாகவும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சந்திரமோகன், இயக்குநர், சுற்றுலா மேம்பாடு சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன் (விளாத்திக்குளம்), சண்முகையா (ஒட்டப்பிடாரம்) ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வின்போது, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் தங்கிட கட்டப்பட்டு வரும் யாத்திரை நிவாஸ் கட்டிட பணிகள் தொடர்பாகவும், கிரி பிரகார பகுதியில் கல் மண்டபம் அமைத்தல் தொடர்பாகவும், மேலும், கும்பாபிஷேகம் செய்து 12 ஆண்டுகள் முடிவடைந்துள்ளதால் கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும், மேலும், ஏழை பக்தர்கள் அதிக அளவில் வரும் திருக்கோயில் என்பதால் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது தொடர்பாகவும் ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பதியை போல திருச்செந்தூர் கோவிலிலும் பல்வேறு வசதிகள் செய்யப்படும் என அறிவித்துள்ளார்கள். அதன் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர். மேலும், திருச்செந்தூர் பகுதியை சிறந்த சுற்றுலாதலமாக மாற்ற பெரிய பல திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஆய்வின் போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், துணை காவல் கண்காணிப்பாளர் ஹர்ஸ்சிங், திருச்செந்தூர் கோட்டாட்சியர் கோகிலா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, முக்கிய பிரமுகர்கள் ஜெகன் பெரியசாமி, உமரி சங்கர், ஆனந்த சேகரன், உதவி ஆணையர் ரோசாலி சுமதா, இந்து சமய அறநிலையத்துறை உதவி கோட்டப்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகாக்கள் கலந்து கொண்டனர்.