• vilasalnews@gmail.com

காங்கிரஸ் கட்சியின் கொரோனா நிவாரண இயக்க பணி ஆலோசனை கூட்டம்!

  • Share on

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் கொரோனா நிவாரண இயக்க பணிகளை வேகப்படுத்திட  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் வீடுகளுக்கு சென்று நலம் விசாரித்தல், அவர்களுக்கு தேவையான குறிப்புகளை எடுத்துக்கொள்ளுதல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று குடும்ப உறுப்பினர்களிடம் இரங்கல் தெரிவித்தல் உள்ளிட்ட பணிகளை காங்கிரஸ் கட்சி சார்பாக கொரோனா நிவாரண இயக்கம் செய்து வருகிறது.

இத்தகைய கொரோனா நிவாரண இயக்க பணிகளை மேற்கொள்ளும் காங்கிரஸ் முன் களப் பணியாளர்களோடு, கொரோனா நிவாரண இயக்க பணிகளை வேகப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் சார்பில் நடைபெற்றது. 


இக்கூட்டத்திற்கு, காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார்.  தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், தூத்துக்குடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

இதில், மாவட்ட பொறுப்பாளர்கள் பால்ராஜ், மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, பிரபாகரன், முன்னாள் மாவட்ட தலைவர் அருள், மாவட்ட எஸ்சி/எஸ்டி பிரிவு தலைவர் ராஜாராம், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நடேஷ்குமார், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலெட்சுமி, நிர்வாகிகள் பெனில், ராஜன், அருணாச்சலம், பிரபாகர், ராஜா, கோபால், முனியசாமி, கதிர்வேல், முத்துராஜ், மகாலிங்கம், கிருஷ்ணன், கோபி, சண்முகசுந்தரம், அழகுராஜா, கனிராஜ், சிவக்குமார், இந்திரா, சாந்தி, ஆரோக்கியம், அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா 26ம் தேதி தொடங்குகிறது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் எம்.பி., அமைச்சர் ஆய்வு!

  • Share on