• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோயிலில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் திருப்பணிகள் தொடர்பாக கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். 

தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கும்பாபிஷேக விழா நடைபெறவில்லை. மேலும் பல்வேறு திருப்பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலயத்தில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீன் வளம்,மீனவர் நலம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

இந்த ஆய்வின்போது, பெருமாள் கோயிலில் ரூ.90 இலட்சம் மதிப்பில் சுவாமி கர்ப்பகிரகம், பூமாதேவி மற்றும் ஸ்ரீதேவி சிலை உள்ள பகுதிகள் சீரமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகளுக் கான பணிகளை ஆய்வு செய்து உடனடியாக பணிகளை தொடங்க உத்தரவிட்டனர். மேலும், அங்கு கல் மண்டபம் அமைப்பது குறித்தும், கும்பாபிஷேகம் நடத்துவது குறித்தும் கலந்தாய்வு மேற்கொண்டனர். ஆலைய கமிட்டியை சீரமைத்து மேற்கண்ட திருப்பணிகளை மேற்கொள்ளவது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க உத்தரவிட்டனர். 


பின்னர்  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்:

தூத்துக்குடி பெருமாள் கோவிலில் ரூ.5கோடியில் ராஜகோபுரம் உட்பட ரூ.10 கோடி மதிப்பில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகள் ஓராண்டிற்குள் நிறைவு பெறும் என்று தெரிவித்தார். முன்னதாக கோவிலுக்கு வருகை தந்த கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர்களுக்கு பிரதான பட்டர்கள் செல்வம் மற்றும் வைகுண்ட ராமன் தலைமைையில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். 

ஆய்வின்போது, இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், செயலாளர் சந்திரமோகன், சுற்றுலா மேம்பாடு இயக்குனர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், சண்முகையா எம்எல்ஏ, மார்க்கண்டேயன் எம்எல்ஏ, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, உமரி சங்கர், ஆனந்த சேகரன், உதவி ஆணையர் ரோசாலி சுமதா, திருக்கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, திமுக நிர்வாகிகள் கோட்டுராஜா, கிறிஸ்டோபர் விஜயராஜ், உமரி சங்கர், அருண்குமார், பாலசுப்பிரமணியன், அம்பா சங்கர், அந்தோணி தனுஷ்பாலன், சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

  • Share on

தூத்துக்குடி அருகே அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி கைது!

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா 26ம் தேதி தொடங்குகிறது!

  • Share on