• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்திற்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் - ஆட்சியர் வழங்கினார்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் அலுவலகத்திற்கு, ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளரிடம் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில் தொடங்க கடன் உதவி பெற்று, பல்வேறு பொருட்களை தயார் செய்து வரும் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியை, மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். கண்காட்சியில் பாக்கு மட்டை தயாரித்தல், குளிர்பானம் தயாரித்தல், தென்னை நாரிலிருந்து காயர்மேட் தயாரித்தல், வாசனை திரவியங்கள் தயாரித்தல், முந்திரி பருப்பு ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிறுவன தயாரிப்புகளை பார்வையிட்டார். 

அதனை தொடர்ந்து, மாவட்ட தொழில் மையம் அலுவலகத்திற்கு, சிறந்த தொழில் மையம் தரமான நிர்வாக கட்டமைப்புக்கான ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதாவிடம் வழங்கினார். தொடர்ந்து எஸ்தர் ராணி என்பவருக்கு ஆயத்த ஆடை தயாரிக்க ரூ.23.84 இலட்சம் கடன் (மானியம் ரூ.8.34 இலட்சம்) உதவிக்கான காசோலையை வழங்கினார். ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) கிறிஸ்டோபர் ஜெயபாலன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) சரஸ்வதி, வட்டாட்சியர் ஜஸ்டின், மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் ராமசந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • Share on

வீட்டு உபயோக சிலிண்டர் விலை நிர்ணயம்: கூடுதல் தொகை செலுத்த வேண்டாம் - ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடி அருகே அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி கைது!

  • Share on