• vilasalnews@gmail.com

வீட்டு உபயோக சிலிண்டர் விலை நிர்ணயம்: கூடுதல் தொகை செலுத்த வேண்டாம் - ஆட்சியர் அறிவிப்பு!

  • Share on

தூத்துக்குடி  மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு 01.07.2021 முதல் எரிவாயு நிறுவனங்களால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ.899 ஆகவும், கோவில்பட்டியில் ரூ.897.50 ஆகவும், கழுகுமலையில் ரூ.906 ஆகவும், கயத்தாரில் ரூ.909 ஆகவும், எட்டையபுரத்தில் ரூ.897.50 ஆகவும் மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.916 எனவும், 

பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ.899.50 ஆகவும், ஸ்ரீவைகுண்டத்தில் ரூ.899.50 ஆகவும், மற்றும் குளத்தூரில் ரூ.899.50 எனவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.899 எனவும், 01.07.2021 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2kg) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தெரிவித்துள்ளார்.

  • Share on

இலங்கையை சேர்ந்தவர்களை படகில் கடத்தி வந்ததாக தூத்துக்குடியை சேர்ந்த 2 பேர் கைது!

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்திற்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் - ஆட்சியர் வழங்கினார்!

  • Share on